எங்களைக் குறித்து
ஊழிய தரிசனம்
TWR360 யானது 'மொழி ' என்னும் தடையை உடைத்தெறிந்து செயல்படுவதாகும். இதன்மூலம் பயனாளிகள் கிறிஸ்தவ ஊடகங்களின் வளங்களை வாசித்தும், பதிவிறக்கம் செய்தும் , கிறிஸ்துவோடு நடைபோட்டு தங்களின் அனுதின வாழ்க்கையில் வளருவார்கள்.
ஊழியப் பணி
இணைய தளம், செல் போன் பயன்பாடுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில்கொண்டு, கிறிஸ்துவின் 'மாபெரும் கட்டளையை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் சபைக்கு உதவும்படி TWR தன்னுடைய ஊடக ஊழியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதிலே TWR360 -யானது தனது கவனத்தை செலுத்துகிறது .
- டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் கிறிஸ்தவ செய்திகளின் வளங்களை எளிய முறையில் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் தனது சொந்த பாஷையில் , எந்த நேரத்திலும் , எங்கிருந்தாலும் , கணனி மூலமாகவோ , ஸ்மார்ட் போன் மூலமாகவோ அணுகும்படி ஏற்பாடு செய்தல்.
- சிறிய அளவிலும் பெரிய அளவிலும் செயல்படும் ஊழியங்களுடன் இணைந்து ,ஒருங்கிணைந்த , பல்நோக்கு செயல்பாடுகளுடன் கூடிய செய்தி உபகரணங்களை கிறிஸ்தவ தொடர்பாளர்களுக்கு வழங்குதல்
- TWR 360-ன் அனைத்துவகையான நிகழ்வுகளும் அவரவர் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் கிடைக்கும் வண்ணமாக வானொலி ஒலிபரப்புடன் இணைந்து ஓர் மைய ஸ்தலமாக செயல்படுதல்
TWR-யை பற்றி
தற்பொழுது TWR ஊழியமானது , பாஷை மற்றும் பேச்சு வழக்கில் உள்ள 230 மொழிகளில் இயேசு கிறிஸ்துவுக்காக உலகத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. எங்களுடைய உலகளவிலான ஊடக ஊழியமானது கோடிக்கனக்கான மக்களை வேதாகம சத்தியத்தின் வழியாக சுமார் 160 க்கும் மேலான நாடுகள் மூலம் எடுத்துச் செல்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக , சந்தேகத்தில் வாழ்ந்த அநேகரை ,தீர்மானதிற்குள்ளும் , தீர்மானம் எடுத்தவரை கிறிஸ்துவின் சீஷர்களாகவும் மாற தேவன் தாமே TWR ஊழியத்திற்கு உதவி செய்துவருகிறார்.
சர்வதேச ஊழிய பங்காளர்கள், அருகில் உள்ள சபைகள் மற்றும் பிற ஊழியங்களுடன் இணைந்து அர்பணிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் சீஷசதுவதிற்கு தேவையான நம்பிக்கைவுட்டும் செய்தி சார்ந்த சாதனங்களை தனி நபருக்கும் , சமுதாயத்திற்கும் , உலகத்திற்கும் TWR வழங்கி வருகிறது. மிகவும் சக்தி வாய்ந்த AM/MW/SW போன்ற அலை வரிசைகளோ , அல்லது FM ரேடியோ மூலமாகவோ ,அல்லது இனையதளத்தை பயன்படுத்தும் நபராய் இருப்பினும் , அல்லது நேயர்களை நேரில் சந்திபதாக இருப்பினும் , TWR ஓர் மாபெரும் நிலைத்திருக்கும் ஆவிற்குரிய அடித்தளத்தை பதித்து விடுகிறது என்பது நிச்சயம் .