குறித்து
மினி பைபிள் காலேஜ் என்பது வேதாகமம் முழுவதையும் ஆய்வு செய்தல் மற்றும் கூடுதலாக மலைப்பிரசங்கத்தின் போதனைகள், குடும்பம் மற்றும் திருமணம் சார்ந்த தலைப்புகளடங்கிய படிப்பினைகளை உள்ளடக்கியதாகும். மொத்தத்தில் கூறப்போனால், இந்தப் பாடங்கள் விசுவாசிகளைச் செறிவூட்டவும், உலகம்முழுவதிலுமுள்ள சபைகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையிலும் இன்டெர்நேஷனல் கோஆப்பரேட்டிங் மினிஸ்ட்ரீஸ் வாயிலாக வழங்கப்படும் முக்கிய பாடத் திட்டம் ஆகும்