நம்பிக்கை, வலிமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிய முக்கியமான கருத்துக்களை ஆராயும் இந்தத் தொடரில் உத்வேகப் பேச்சாளர் திரு சஞ்சீவ் எட்வர்ட் அவர்களுடன் இணையுங்கள். ஒவ்வொரு தொடரும் நம்பிக்கையைக் கண்டறியவும், நம்மை விட மேலான ஒன்றுடன் இணைவதற்கும் கதைகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடங்கள் மூலம், பார்வையாளர்கள் சவால்களை எவ்வாறு ஜெயிப்பது என்றும், அவர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்குவது என்றும் தெரிந்து கொள்ள உதவுகிறோம். இந்த தொடரில்: வார்த்தைகள் நாக்கினால் மரணம், ஜீவன் இரண்டையும் கொண்டு வர முடியும், மேலும் நம்முடைய வார்த்தைகள் நம்மை சுற்றி இருக்கிறவர்களை உயர்த்தலாம் அல்லது அவங்களுக்கு தீங்கு செய்யலாம். ஒருவருடைய வார்த்தைகள் உங்களுக்குள் ஜீவனை பேசுகிறதாக எப்பொழுதாவது உணர்ந்து இருக்கிறீர்களா? ஒருவேளை ஒரு நண்பருடைய ஊக்கம் உங்களோடு தங்கி இருக்கலாம். நம் வார்த்தைகளில் கவனம் செலுத்துவதின் முக்கியத்துவத்தையும், அது நமக்கு நெருக்கமானவர்களிடம் ஏற்படுத்துகிற தாக்கத்தையும் பற்றி சிந்திக்கலாம்.
ஜீவனை பேசுங்கள்!
’விருப்பமானவைகள்’ பகுதியுடன் சேர்த்துக்கொள்