குறித்து
ஐந்து பில்லியனுக்கும் அதிகமான வேதாகம பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது 3,000 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் உலகளவில் ஏழு பில்லியன் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. உலகத்திலுள்ள ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வடிவத்தில், தங்கள் கைகளில் கடவுளின் வேத வசனத்தை பெற முடியும். ஆனாலும், பலர் வேதாகமத்தை திறப்பதில்லை.
ஓபன் தி பைபிள், இதை மாற்றுவதற்கான ஒரு பணியில் உள்ளது, எப்படியெனில் விசுவாசிளை அணிதிரட்டி அவர்களை சுற்றி இருக்கும் மக்களுடன் கிறிஸ்துவைப் பற்றி பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. அதன் மூலம் விசுவாசிகள் தங்களுக்காக வேதாகமத்தை வாசிக்க உதவுகிறோம், மற்றவர்களுடன் வேதாகமத்தை வாசிக்க அவர்களைத் தயார்படுத்துகிறோம், இதனால் அனைவரும் கடவுளுடைய வார்த்தையின் வல்லமையை அனுபவிக்க முடியும்.